சாதனை விவசாயியின் வாழ்க்கை செங்கல்பட்டு மாவட்டம்

சாதனை விவசாயியின் வாழ்க்கை செங்கல்பட்டு மாவட்டம்

அனைவருக்கும் வணக்கம் !.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தண்டி கிராமத்தில் எங்கள் பண்ணை அமைந்துள்ளது . இயற்கை முறையில் காய்கறி மற்றும் கீரை வகைகள் பயிர் செய்கின்றோம் . வார நாட்களில் அலுவலக வேலைகளை கவனித்துக்கொண்டும் வார இறுதி நாட்களில் பண்ணை வேலைகளை செய்கின்றோம் . எங்களின் முன்னாள் மாடித்தோட்ட அனுபவம் மற்றும் சமூக வலைத்தளங்களில் நாங்கள் கற்றதை எங்கள் பண்ணையில் செயல்படுத்துகிறோம்.

tamilstorage

பண்ணை

இயற்கை விவசாயம் என்பது கால்நடைகள் இல்லாமல் இல்லை என்பதை நன்கு உணர்ந்ததால் கூட்டு பண்ணை முறையில் நாங்கள் 15 பேர் சேர்ந்து நாட்டு மாடுகள் (காங்கிரேஜ் வகை ) வங்கியுள்ளோம் . கால்நடை நிர்வாகத்தை ஒரு அமைப்பினரிடம் கொடுத்துள்ளோம் . சாணம் மற்றும் கோமியம் தினசரி சேகரித்து வளர்ச்சி ஊக்கிகளான பஞ்சகவ்வியம் , ஜீவாம்ருதம் தயார் செய்கின்றோம் . வளர்ச்சி ஊக்கிகளான EM கரைசல் , மீன் அமிலம் , வேஸ்ட் டீகம்போஸ்ர் (WDC ) போன்றவற்றையும் பயன்படுத்துகின்றோம்.

பண்ணையிலுள்ள பசு Tamilstorage

பண்ணையிலுள்ள பசு

பசு சாணத்தோடு அசோஸ்பைரில்லம் , பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை சேர்த்து ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்து அதை பயிர்களுக்கு கொடுக்கின்றோம் . 5 இலை கஷாயம் , 10 இலை கஷாயம் போன்ற இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்துகின்றோம்.

ஊட்டமேற்றிய  தொழு உரம்

ஊட்டமேற்றிய தொழு உரம்

தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும் நண்மை செய்யும் பூச்சிகளை வரவழைக்க சில பூச்செடிகளை (கேந்தி ) எங்கள் பண்ணையில் வளர்க்கின்றோம் . அறிவியல் முறைகள் ஆன விளக்கு பொறி , இனக்கவர்ச்சி பொறிகள் , மஞ்சள்/நீல நிற அட்டை பொறிகள் பயன்படுத்துகின்றோம் . சூடோமோனஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி போன்ற பூஞ்சைகளை பயன்படுத்தி வேர் அழுகல் போன்ற நோய்களை கட்டுப்படுத்துகிறோம் . 15-20 சிறு விடை கோழிகளை பூச்சி கட்டுப்பாடிற்காக வளர்க்கின்றோம் (இறைச்சிக்காக மற்றும் முட்டைக்காக இதை பயன்படுத்துவதில்லை ).

பண்ணையில் விளையும் காய்கறிகள்

பண்ணையில் விளையும் காய்கறிகள்

பண்ணையில் விளையும் காய்கறிகள்

பண்ணையில் விளையும் காய்கறிகள்

தற்சார்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற பெரும் கனவோடு கடந்த 6 மாத காலம் முன் நாங்கள் (என் அணைத்து குடும்ப உறுப்பினர்குளுடன் ) தொடர்ந்த இந்த பயணத்தில் நாங்கள் இன்று ஒரு சமூக அக்கறையோடு ஒரு படி மேல் வைத்து எங்கள் அருகில் உள்ள 25 குடும்பங்களுக்கு நஞ்சில்லா காய்கறிகள் மற்றும் கீரைகளை விநியோகம் செய்கின்றோம் என்பதில் எங்களுக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

ரசாயன உரங்களும் பூச்சி கொல்லிகளும் அறவே இல்லாமல் அய்யா நம்மாழ்வார் சொன்ன பாதையில் எங்களின் புரிதலின் மற்றும் முயற்சிகள் அடிப்படையில் இயற்கை விவசாயம் சாத்தியம் என்பதனை இந்த உலகிற்கு நிரூபணம் செய்ய ஒரு மிக மிக சிறிய முயற்சி தான் இது.

எங்களுடைய நோக்கம் யான் பெற்ற இந்த பயனும் புரிதலும் அறிவும் இந்த வையகம் பெற வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளோம் .

எங்களுடைய கற்றல் மற்றும் அனுபவங்களை இந்த காணொளி அலைவரிசியில் பதிவிட்டுள்ளேன் . நேரம் கிடைக்கும் போது கட்டாயம் பார்க்கவும்.இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமாக உள்ள அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்`

தொடர்புக்கு : projectrrs36@gmail.com

நன்றி

கி ராம்குமார்

நண்பர்களே உங்களுடைய சிறுகதை அல்லது உண்மை கதை அல்லது உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், நீங்கள் சென்ற சுற்றுலா, உங்கள் விவசாய முறை, உங்கள் ஊர் பற்றிய முழு தகவல் போன்ற அணைத்து விதமான தகவல்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால் தகுந்த புகைப்படங்களுடன் 2 – 3 பக்க கட்டுரையை blogbynavin@gmail.com என்கிற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் இந்த வலைத்தளத்தில் பதிவிடுகிறோம். இந்த பக்கத்தின் லிங்கை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உங்கள் சந்தோசத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி நண்பர்களே

Leave a Comment