ஒரு கிராமத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் இருந்தார் . அவருக்கு இரு கண் பார்வை இல்லை. உடன் பிறந்தவர் 4 பேர் அதில் 3 அக்கா, ஒரு அண்ணன் உள்ளனர் . அக்கா மூன்று பேருக்கும் திருமணம் முடிந்தது விட்டது.
அண்ணனுக்கும் திருமணம் நடந்து விட்டது. அண்ணன் மனைவி அந்த பையனுக்கு திருமணம் நடக்காது எல்லா சொத்தும் நமக்கு தான் என்று நினைத்து விட்டார்கள்.
படிப்பு
பார்வை இல்லாதவர் பள்ளி படிப்பை கண் பார்வை இல்லாத பள்ளியில் படித்தார் . அந்த பள்ளி தஞ்சாவூரில் உள்ளது. அங்கு 1 – 8 வரையும், மேல் படிப்பு சென்னை பூந்தமல்லி பள்ளியில் படித்தார். காலேஜ் படிப்பை திருச்சி ஜோசப் கல்லூரி மற்றும் நேஷனல் கல்லூரியில் படித்து முடித்தார். அவர் M.A, M.,Phil, B.Ed படித்துள்ளார். அவருக்கு அரசு வேலை கிடைத்தது. அவருக்கு அவங்க வீடடில் திருமண ஏற்பாடு செய்தார்கள்.
திருமணம்
மாற்று திறனாளியின் இன்னொரு அக்காவை உள்ளூரிலியே ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அவங்களுக்கு ஒரு பையன் ஒரு பெண் உள்ளனர். அந்த அக்கா தன்னுடைய பெண்ணை தன் தம்பிக்கு மணமுடித்து வைக்க ஆசை இருந்தாலும் அண்ணியின் மேல் உள்ள பயத்தால் தம்பிக்கு கொடுக்காமல் இருந்து விட்டார். மாற்று திறனாளி என்பதால் அந்த அக்கா பெண்ணுக்கும் மாமாவை கட்டிக்க விருப்பம் இல்லை.
மாற்று திறனாளிக்கு அவர்கள் வீட்டில் பார்த்தது படிக்காத பெண் மற்றும் அவரை போலவே ஒரு மாற்று திறனாளி பெண்ணை தேடி திருமணம் செய்து வைத்துவிடவேண்டும் என்று மொத்த குடும்பமும் எண்ணியது. ஆனால் நடந்ததோ வேறு. நார்மலான ஒரு பெண் கிடைத்தால் அதனால் அவர்கள் திருமணமும் நடந்தது. அந்த பெண் B.C.A படித்துள்ளார். அது அண்ணன் மனைவிக்கு பிடிக்கவில்லை.
திருமணம் முடிந்து அந்த பெண் கணவனின் வீட்டுக்கு நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று சென்றாள் ஆனால் அங்கு நடந்ததோ வேறு. இவளை வாழ விட்டாள் இவளுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதால் இவள்மேல் இல்லாத பொல்லாத பழியையும் கூறி துன்புறுத்துவார்கள். நகைகளை திருடி விட்டாள் என்று கூறி அந்த பெண்ணின் பெற்றோரை வரவைத்து இவள் மேல் பொய் புகார்களாக கூறி அவளை அவள் பெற்றோருடன் அனுப்பிவிட நினைப்பார்கள். மாற்றுத்திறனாளி நபரோ அவருடைய அண்ணன் அன்னிக்கு சாதகமாக பேசுவாரே தவிர அவருடைய மனைவிக்கு சாதகமாக பேசவே மாட்டார். அண்ணன் அண்ணி பேச்சை கேட்டுக்கொண்டு அந்த பெண்ணை அடித்து துன்புறுத்துவார் .
இந்த பிரச்சனைக்கு நடுவில் 2 பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைகளையும் கண்டுக்க மாட்டார் . இப்படி நடந்து அந்த பெண்ணும் அடி, உதை என்று வாங்கி இங்க, அங்க என்று வாழ்ந்து கொண்டு இருந்தார் .
அவங்க அண்ணனுக்கு 3 பிள்ளைகள் அதில் 2 பெண் 1 பையன். அண்ணன் மகளுக்கு நல்ல இடமா பார்த்து எந்த பிரச்சனை வராத அளவுக்கு சொத்து எல்லாம் பிரித்து மாப்பிளை பேருக்கு அவுங்க அப்பா எழுதி வைத்து உள்ளாரா என்று பார்த்து தன் மகளை கொடுத்தார் அந்த அண்ணிக்காரி . அந்த திருமணத்தில் மாற்றுத்திறனாளி தம்பிக்கும் அவரது மனைவிக்கும் அழைப்பு இல்லை. திருமண பத்திரிக்கையிலும் அவர்களின் பெயர் இடம்பெற வில்லை. மாற்றுத்திறனாளி அண்ணன் மகளும் அந்த பெண்ணை மதிக்கவில்லை .
வீட்டிலும் சண்டை என்பதால் மாற்றுத்திறனாளி யின் அக்கா கணவர் அவங்கள வாடகை வீட்டிற்கு அழைத்து சென்றார். வாடகை வீட்டிற்க்கு சென்ற பிறகு 2 மாதம் நல்ல மனிதரை இருந்தார் அந்த மாற்றுத்திறனாளி கணவர் . அருகில் அக்கா வீடு உள்ளது. அக்கா மகள் வீடு உள்ளது. அக்கா கணவர் நல்ல மனிதர் என்று சொல்ல வில்லை. கொஞ்சம் பரவாயில்ல அறிவுரை செல்லுவார்.
2 மாதத்திற்கு பிறகு தனது அண்ணன் மகள் வளைகாப்பிற்கு மனைவி வரவில்லை என்று அந்த பெண்ணை மாட்டை அடிப்பது போல் அடித்து, காது தோடு அறுந்து ஏகப்பட்ட இரத்தம், பக்கத்தில் உள்ளவங்க இல்ல என்றால் அந்த பெண் அன்றே இறந்து போயிருப்பாள்.
தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருப்பாள் அனால் அந்த பிஞ்சு குழந்தைகளின் வாழ்க்கையை நினைத்து பார்த்து அந்த முடிவை மாற்றிக்கொள்வாள். இது அடிக்கடி நடக்கும். அந்த அளவுக்கு அவள் மனது புண்பட்டு இருந்தது. கட்டிய கணவரும் அவளை மதிப்பதில்லை. கணவனின் குடும்பமும் அவளுக்கு திருட்டு பட்டம் கட்டுவது குடும்பத்தை பற்றி கேலியாக பேசிக்கொண்டே இருந்தால் அவளும் என்னதான் செய்வாள். அனைத்தையும் பொறுத்துக்கொண்டு குழந்தைகளுக்காக வாழ்ந்து வந்தாள்.
நான்கு மாதம் கழித்து அந்த மாற்று திறனாளி கணவர் தனது சொந்த ஊருக்கு சென்றார். அனால் அங்கு சென்றவுடன் அவருடைய அப்பா அண்ணா அண்ணி யுடனான சண்டையில் எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் மாற்றுத்திறனாளி நபர். அப்பா அம்மா அண்ணா அண்ணி என்று யாரும் கண்டு கொள்ளவில்லை. அப்பொழுதுதான் அவருக்கு தன் குடும்பத்தின் சுயரூபம் தெரிந்தது. பக்கத்து வீட்டு கார பெண்மணி தான் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அதன்பின் அவரோட அக்கா கணவர் தான் அவரை காப்பாற்றி வீட்டுக்கு கொண்டு வந்தார். மாற்றுத்திறனாளியின் அம்மா அப்பா அண்ணா அண்ணி என்று யாரும் கண்டுக்காமல் விட்டாலும் அவரோட அக்கா கணவர் தான் அவருக்கு உதவி செய்து வருகிறார் இன்றுவரை அவர்தான் அந்த மாற்று திறனாளி குடும்பத்திற்ற்கு அப்பாவாக இருந்து உதவி செய்து வருகிறார்.
பெண்ணின் குடும்பம்
மாற்றுத்திறனாளியை மணந்த பெண்ணிற்கு 1 அக்கா 1 தம்பி கூட பிறந்தவர்கள். அக்காக்கு திருமணம் முடிந்தது 2 பிள்ளைகள். தம்பிக்கு திருமண நடக்க வில்லை. அந்த பெண்ணின் அப்பாவும் 4 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டர்.
முடிவுரை
மாற்றுத்திறனாளிக்கு கிடைத்த பெண்ணோ நல்லவள் அதை மாற்றுத்திறனாளி நபர் புரிந்து கொள்ளாமல் சொத்துக்காக சுயநலமாக இருக்கும் அண்ணா அண்ணி பேச்சை கேட்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டார் சொத்தையும் இழந்து விட்டார். கடைசியில் அவருடைய குழந்தைகளுக்கும் மனைவிக்கும் அடைக்கலம் கொடுத்து அன்புகாட்டுவது அவருடைய அக்கா கணவர்.
வாழ்க்கையில் புரிதலும் விட்டுக்கொடுத்தலும் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் நண்பர்களே.
இந்த கதையை எழுதி நமக்கு அனுப்பியவர் Chitra Mehala அவர்கள்…. நன்றி Chitra..
நண்பர்களே உங்களுடைய சிறுகதை அல்லது உண்மை கதை அல்லது உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், நீங்கள் சென்ற சுற்றுலா, உங்கள் விவசாய முறை, உங்கள் ஊர் பற்றிய முழு தகவல் போன்ற அணைத்து விதமான தகவல்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால் தகுந்த புகைப்படங்களுடன் 2 – 3 பக்க கட்டுரையை blogbynavin@gmail.com என்கிற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் இந்த வலைத்தளத்தில் பதிவிடுகிறோம். இந்த பக்கத்தின் லிங்கை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உங்கள் சந்தோசத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி நண்பர்களே