ஒரு பாதி வாழ்க்கை கிராமத்தில் தொடங்கி மறு பாதி வாழ்க்கை நகரை நோக்கி நகர்ந்து அதுவே அடையாளமாய் மாற்றிக்கொண்டு பயணிக்கும் நபர்கள் தான் இன்று ஏராளம்.. தவழும் குழந்தை அடுப்பங்கரையில் தன் தாயை தேடி தவழ்ந்து சென்று அவள் காலடி சேர்ந்ததும் புடவையை இழுத்து வானுயர்ந்த கோபுரத்தை பார்ப்பதை போல் தலையை தூக்கி விண்ணை அடைந்தது போல் பெருமிதத்தோடு நமட்டு சிரிப்பு சிரிக்கும்..அந்த தாயின் அந்நாளின் மொத்த கலைப்பையும் போக்கும் மருந்தும் அந்த மழலையின் புண்ணகையே..அவள் அந்த குழந்தையை வாரி அனைத்து கொண்டு சற்று தொலைவில் அமர்த்தி விட்டு நாலாபுறமும் சிதறிய விளையாட்டு சாமான்களை குழந்தையிடம் போட்டு விட்டு அடுப்பறை செல்லும் முன் அந்த குழந்தை அவள் காலடியை சேர்ந்திருக்கும்..
இன்று நகர் புறங்களில் அந்த குழந்தை தவழ தரையும் இல்லை.. கையில் இழுத்து பிடிக்க புடவையும் இல்லை.. ஏன்.. அருகில் தாயே இல்லை பெரும்பாலான வீடுகளில்.. மழலை பருவத்திலேயே தாயை பிரிந்து இருக்கும் சூழல் எதற்கு?… எதை தேடி செல்கிறார்கள்..?.. யாருக்காக ஓடுகிறார்கள்?.. எதிர்காலம் என்ற போர்வை போத்தி நிகழ்காலத்தின் கனவுகளை கலைத்தால் எங்கே அவர்கள் மன நிறைந்த வாழ்க்கை?.. நிகழ் காலத்திலும் இல்லை எதிர்காலத்திலும் இல்லை..
அன்றும்-இன்றும்:
கைநிறைய மணலை வாரி அள்ளி முகம் முழுதும் தேய்த்து மகிழ்ந்த குழந்தைகளாய் நாம் இருந்தது போய் இன்று சிறிதளவில் மணல் பட்டாலும் “ஹான்ட அன்ட் மவுத் டச் இன்ஃபக்ஷன்” என்கிற நோய் அந்த பிஞ்சு உள்ளங்கை களிலும் பாதங்களிலும் நோகடிக்கும்.. முதலில் மிரண்டு போனேன். பின்பு நாள்போக்கில் நானும் பழகி கொண்டேன். தாதுக்கள் நிறைந்த மணல்கூட இன்று பாலாய் போகிறது… காரணம் மணலா இல்லை உடல் நிலையா என்று யாமரியோம்.
நண்பர்களே உங்களுடைய சிறுகதை அல்லது உண்மை கதை அல்லது உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், நீங்கள் சென்ற சுற்றுலா, உங்கள் விவசாய முறை, உங்கள் ஊர் பற்றிய முழு தகவல் போன்ற அனைத்து விதமான தகவல்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால் தகுந்த புகைப்படங்களுடன் 2 – 3 பக்க கட்டுரையை blogbynavin@gmail.com என்கிற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் இந்த வலைத்தளத்தில் பதிவிடுகிறோம். இந்த பக்கத்தின் லிங்கை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உங்கள் சந்தோசத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி நண்பர்களே
பள்ளி பருவங்களில் மழை பெய்தால் நடைபாதையில் ரோட்டோரத்தில் தெருக்களில் தண்ணீர் தேங்கி இருக்கும்.. அதை கண்ட உடன் மனம் கடலலை போல் பொங்கி எழும்.. தூரத்தில் பார்த்த உடன் சிறிது பின் சென்று வேகமாக ஓடி வந்து அந்த சேற்றில் சளப் என்று குதித்து அங்கிருந்தே சுற்றி பார்பர் யாரும் பார்த்தார்களா என்று.. நான் கண்ட காட்சிகள் ஏராளம்.. அன்று கண்ட சந்தோஷங்கள் இன்று எங்கும் தேடி காண இயலவில்லை.. மண் தரையே காண முடியாத போது எங்கு நாம் நீர் தேங்குவதை காண முடியும்.. மழலைகள் கூற்றை கான முடியும்… குழந்தைகள் ஒருபக்கம் குறும்புகள் தொலைக்க மறுபுறம் பெரியவர்கள். உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே வீடுகளை பயன்படுத்தினர்.. உழைப்பு போக மற்ற வேளைகளில் வெளியே அமர்ந்து இளைப்பாறினால் வழியில் செல்பவர்கள் எல்லாம் கலந்துரையாட தொடங்கி புது புது அனுபவங்கள் அவர்கள் உடலுக்கு மட்டுமல்லாமல் மனதிற்கும் இதமாக இருக்கும்..
இன்று கதவை திறக்கவே அடுத்த கனம் பூட்ட தான். வெளியில் நின்றாலே திருடன் போல கண்ணோட்டமிடும் சமூகம்.. ஏன் அன்றைய சூழலில் ஊருக்குள் புதிய நபர் ஒருவர் என்றாலே ஊரே கேள்வி எழுப்பும்.. இன்றைக்கோ அடுத்து குடியிருப்பவர்கள் கூட யார் என்று அடையாளம் தெரியாத நபர்கள் தான் ஏராளம்.. இந்த தனித்திரு சமூகம் தான் களவு, பலாத்காரம் ,கொலை போன்ற மாபெரும் குற்றங்களுக்கு வழிகாட்டியாய் முன்னிற்கிறது..
ஏன் இந்த வானுயர்ந்த மாற்றங்கள்?..
பல யுகங்கள் கடந்ததை போன்ற மாற்றங்கள்..
எதை தேட தொடங்கினோம்?..
எங்கே நாம் தொலைந்தோம்?…
இடையில் இரண்டு தலைமுறைகளே தலை எடுத்தன… ஆனால் எவ்வளவு மாற்றங்கள்… வளர்ச்சி வரவேற்க தக்கதே… ஆனால் பாதி தூரம் கடந்த பின்பு தான் உணர்கிறோம் இந்த வளர்ச்சி முன்னோக்கி அல்ல பின்னோக்கி நகர்கிறது என்று… நகரங்கள் மடமடவென வளர தொடங்கின… மறுபுறம் கிராமங்கள் வளர்ச்சி என்ற பெயரிலே அழிய தொடங்கின… மனிதன் மட்டும் மாறினால் கூட பரவாயில்லை.. காலங்களில் மாற்றம்.. பருவங்களில் மாற்றம்… இயற்கையில் மாற்றம்.. மனித உடல்நிலையில் மாற்றம். ஏன் சூரிய கதிர்வீச்சில் கூட மாற்றங்கள்.. இன்னும் கணக்கிலடங்கா மாற்றங்கள் ஏராளம்.. இவையனைத்தையும் வெற்றிகரமாக மாற்றி அமைத்தது நாம் மட்டுமே.. முழு பெருமையும் மனிதனாகிய நமக்கே சேர்ந்தடையும். ஏன் என்ற கேள்விகள் துழைத்தால் அனைவரிடமும் இருக்கும் ஒரே பதில் “நான் என்ன செய்தேன். . அடுத்தவர் நல்லது க்காக… தன் சந்ததியர்கள் நன்மைகாக” என்ற பதில் மட்டுமே மிஞ்சும்..
தெரியாமல் தான் கேட்கிறேன்.. உங்கள் தந்தை உங்களுக்காக சேர்த்து வைக்கவில்லை என்பதால் உங்களுக்கான அடையாளங்களை நீங்களே உருவாக்கியுள்ளீர்கள்.. வரவேற்கதக்கது.. ஆனால் அதோடு நில்லாமல் உங்களின் அடுத்த சந்ததிக்கான அடையாளங்களையும் உருவாக்கி அவர்களுடைய வாழ்க்கையையும் நீங்களே நிர்ணயித்து அவர்களை வாழ தினிக்கிறீர்கள்..அவர்கள் வாழ்வையும் நீங்கள் சூரையாடுகிறீர்கள்… இப்போது நீங்கள் சேர்த்து வைக்கும் ஆஸ்தி எல்லாம் இந்த தலைமுறையில் தனக்கென அடையாளத்தை இழந்தவனின் ஆஸ்தி ஆகும். இப்போது நகர்புறங்களில் ஒரு நடுத்தர குடும்பம் கடினப் பட்டு ஒரு வீட்டை வாங்கி கொள்கிறார்கள்.. பின் தங்கள் பிள்ளைகள் தலையெடுத்தபின் மகன் இன்னொரு வீட்டுக்கு உரிமையாகிறான். மகள் மன முடிந்து சென்ற பின் அவள் கணவனும் அந்த வீட்டில் மகன் தானே.. அங்கே தனக்கின்ற வீடு…
இந்த சுழற்சி வீடோடு மட்டும் நில்லாமல் இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் என்று ஒரே குடும்பத்தில் உள்ள தனித்தனி நபருக்கு தனித்தனி ஆஸ்தி, வாகனங்கள்… பற்றாததுக்கு பரம்பரை ஆஸ்தி வேற கிராமபுரங்களில்… நீங்கள் பறித்து வாழ்வது மறுபுறம் இருக்கும் தலைமுறை தலைமுறையாக வாடகை கட்ட தினந்தோறும் அலைந்து திரிந்து உழைப்பவர்கள்.. அவர்களும் உங்களுடனே இந்த தலைமுறையிலே பயணிக்கிறார்கள். அவர்களையும் வாழ விடுங்கள்.. தங்கள் தேவையை பூர்த்தி செய்து உங்கள் வாழ்வை நீங்கள் அனுபவித்து வாழுங்கள். உங்கள் பிள்ளைகள் அவர்கள் உழைத்து அவர்கள் ரசித்து வாழட்டும்…
இந்த கதையை எழுதி நமக்கு அனுப்பியவர் Bakya Amirtharaj அவர்கள்…. நன்றி Bakya…
நண்பர்களே உங்களுடைய சிறுகதை அல்லது உண்மை கதை அல்லது உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், நீங்கள் சென்ற சுற்றுலா, உங்கள் விவசாய முறை, உங்கள் ஊர் பற்றிய முழு தகவல் போன்ற அனைத்து விதமான தகவல்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால் தகுந்த புகைப்படங்களுடன் 2 – 3 பக்க கட்டுரையை blogbynavin@gmail.com என்கிற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் இந்த வலைத்தளத்தில் பதிவிடுகிறோம். இந்த பக்கத்தின் லிங்கை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உங்கள் சந்தோசத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி நண்பர்களே
2 comments
நெஞ்சை வருடும் ஒரு அற்புதமான பதிவு,,,இதனை வாசிக்கும் போது என் கடந்த கால வாழ்க்கை என் கண் முன் சற்றே வந்து நின்றது,,,ஏதோ ஒரு இனம் புரியா உணர்வு இதயத்தை கனக்க செய்து விட்டது,,,,இதனை பதிவிட்டவருக்கு என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும்!!!
மிக்க நன்றி. தொடர்ந்து பதிவிடுகிறோம். படியுங்கள்.