“ஜானு, இரவு 9 மணி ஆயிடுச்சு. நாளை அதிகாலை 4 மணிக்கு கிளம்பனும் நினைவிருக்கிறதா? காலைல மட்டும் எந்திரிக்காம இருங்க 3 பேருக்கும் வச்சிருக்கேன் கச்சேரி “ என்று கடுகடுத்தான் அன்பான கணவன் மனுஷ்யந்தன்… 3 பேர் என்றதும் தான் அவள் சிந்தையில் உதித்தது இன்னும் தன் 2 செல்ல பிள்ளைகளின் வயிற்றை நிரப்பவில்லை என்று.. அதை வேறு இப்ப சொன்னா தொலைந்தோம் என்று மனதோடு உரையாடி கொண்டவள் “நீங்க மாடிக்கு ஏறுங்க பேக் பன்ன லக்கேஜ வெளியில் வைத்து விட்டு தண்ணீர் எடுத்து கொண்டு வரேன்” என்றாள். கூட செல்ல மாட்டார்கள் என்ற மன உறுதியுடன் அழைத்தாள் தன் குழந்தைகளை “குட்டூஸ் அப்பா கூட மாடியில போய் படுங்க” என்று… ஆனால் எங்கிருந்தும் எந்த பதிலும் வரவில்லை. பொறுமை இழந்த கணவனோ என்னவோ பன்னுங்க நான் படுக்க போறேன் என்று படிக்கட்டு ஏற துவங்கி விட்டான். அப்பாட பிழைத்தேன் என்று மனதில் என்னியவள் தேட தொடங்கினாள் குழந்தைகளை. வெளியே வந்து எட்டிப் பார்த்தால் அவர்களை மேலும் அழைக்க அவளுக்க மனமில்லை. ஏனெனில் அவர்களோடு விளையாடி கொண்டிருப்பது எப்போதும் இறுக்கமாக தோன்றும் தன் கம்பீரமான தந்தை. சிறு குழந்தையாக மாறி குழந்தைகளோடு குழந்தையாக மாறி கால்பந்து ஆடி ஆடிக்கொண்டிருந்தார்கள் 3 குழந்தைகள்.
மனதில் நகைத்து கொண்டு,கார்த்திக்… அம்மா தோசை சுட போரேன் அது வரை விளையாடுங்க.அம்மா வந்ததும் சாப்பிட வரனும் என்று தாய்க்கே உரிய அன்பு கலந்த அதட்டல் ஒலி கொடுத்தாள்.சரி அம்மா என்று எதிரொலி வந்தது. தோசையும் வந்தது. குழந்தைகளுக்கும் ஊட்டியாச்சு” கார்த்திக், சஞ்சய் ,சாப்டாச்சு ல மாடியில் அப்பா கூட போய் தூங்குங்க அம்மா வரேன்” என்றாள். என்றும் மறு சொல் கூராத 5 வயது கார்த்திக் சரி அம்மா என்று கிளம்பினான். மறந்தும் கூட சொல்வதை கேட்க கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கும் 3 வயது சஞ்சய் நோ அம்மா என்றான். “சஞ்சு குட்டி நம்ம நாளை காலை சூரியனை முந்தி நாம் சீக்கிரம் எழுந்து கிளம்ப வேண்டும். அப்பதான் வெயில் சுடுவதற்கு முன் நாம் செல்ல முடியும். ரொம்ப வெயில் வந்திட்டா அப்பா க்ககு கார் ட்ரைவ் பண்ண கஷ்டமாயிடும். இப்போது சூழ்நிலை உணர்ந்தவனாய் அந்த 3 வயது மாபெரும் மனிதன் “ஓகே மாம்” என்று சொல்லிவிட்டு தாத்தா விற்கும் அம்மம்மா விற்கும் பை சொல்லி விட்டு மாடிக்கு ஏறினான். ஆம் அவர்கள் இப்பொழுது கோடை விடுமுறை க்கு தன் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறாள். மாதம் 1 கழிந்தாலும் தன் தாய் வீட்டை விட்டு கிளம்பும் மனநிலை முதல் நாள் பள்ளிக்கு கிளம்பும் முன் கலங்கும் குழந்தைகள் போல் தான் ஒவ்வொரு பெண்ணிற்கும். இவள் மட்டும் விதிவிலக்கா என்ன.. அதே கலக்கத்துடன் லக்கேஜ் எல்லாம் வெளியே எடுத்து வைத்தாள். அங்கிருந்து அப்பா வினவினார் “என்னம்மா இப்பவே எடுத்து வைக்கிற” என்று… ஆம் அப்பா காலைல 4 மணிக்கு லாம் கிளம்பனும்னு சொல்லிருக்காங்க என்று பதிலுரைத்தாள். அடுப்பங்கரையிலுருந்து “பசங்களுக்கு டிராவல்ல ஸ்நாக்ஸ் முந்திரி பிஸ்தா எல்லாம் எடுத்துகிட்டியா” என்று ஒலி வந்தது. ஆம் வேரு யார் எத்தனை வயதானாலும் தாய்மை குணம் மாராத அவள் அன்னை தான். ஆம் அம்மா எடுத்துட்டேன் என்றாள். சரி மா லேட் ஆய்டுச்சு ௺ போய் தூங்கு ௭ன்றார்கள் பெற்றோர்கள் இருவரும். ம் கிளம்பிறேன் ௭ன்று கலக்கம் குதூகலம் ௭ல்லாம் கலந்த ௨ணர்வாய் இருவருக்கும் குட் நைட் கூறி மாடி ஏறினாள்.
அறை கதவு திறந்து பார்த்தால் ௨ள்ளே ௮ப்பாவும் பிள்ளைகளும் டி. வி பார்த்து கொண்டிருந்தகொண்டிருந்தனர். ௮திர்ந்தவளாய் நீங்களாம் இன்னும் தூங்கலயா ௭ன்று கர்ஜித்தாள். பயந்தவர்கள் போல் நடித்த பாலகர்களும் கணவனும் டி. வி அனைத்துவிட்டு போர்வைக்குள் ஒளிந்தார்கள் .
அலாரம் அடித்து கொண்டிருக்க விழி திறக்க மறுத்தவளாய் கையால் அனைத்து போர்வையோடு புரண்டாள் ஜானவி…மறுகணம் மணுவின் எச்சரிக்கை செவிகளில் ௭திரொலித்தது. விழி திறந்து பார்த்தால் நள்ளிரவு 3 மணி. இனியும் தூங்குனா காலி என்று எண்ணி தயாராக தொடங்கினாள். இன்னும் 3 பேரை கிளப்பனுமே…அதிசயமாய் 3 பேரும் உடனெழுந்து தயாரானார்கள். அதிகாலை 5 மணி ஆயாச்சு. வீட்டை விட்டு கிளம்ப தயாரானார்கள். பெற்றோர்களிடம் பிரியா விடைகொண்டு ௭ல்லோ௫ம் குதூகலமாக கிளம்பினார்கள்..
இன்று ௭ல்லோ௫க்கும் விடிந்ததே பயணத்தில் தான். அம்மா அதுக்குள்ள சன் வந்துடுச்சு….. மார்னிங் ஆயிடுச்சா… ௭ன்று கேள்விகள் துளைக்க ஆரம்பித்தார்கள். இரு மலைகளின் நடுவில் கதிரவன் எழ தொடங்கினான். தீபாவளி அடுத்து இன்று தான் சூரிய உதயத்தை காண்கிறார்கள். ஏய் பாருடா சன் எவ்ளோ அழகா இருக்குனு சகோதரர்கள் கதைக்க தொடங்கினார்கள். ஹேய் ….. அம்மா நம்ம வின் பண்ணிட்டோம்.. சன் கு முன்னாடி நம்ம கிளம்பிட்டோம்.. வி ஆர் த வின்னர்…அந்த ஜ்வாலையின் அதிபதியை யே மிஞ்சிய வர்கள் போல் கர்வம் கொண்டார்கள் அந்த குழந்தைகள்.. அனைத்தையும் ரசித்த வண்ணம் கார் ஓட்டி கொண்டுருந்தார். ” ஜானு.. ௨ன்னை சுற்றி நான்கு திசையில் பார்”..என்றான்.. ஏனேனில் அவனுக்கு தெரியும் அவள் சிந்தனை முழுவதும் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் தன் குழந்தைகள் பற்றி தான் இருக்கும் என்று.. சற்று உணர்ந்தவளாய் நிமிர்ந்து கண்களை சுழற்றினாள். அவள் கண்ட காட்சி அவள் தாயென்பதை மறந்து குழந்தை யாய் மாறி வியப்பில் கத்த தொடங்கினாள். அவள் கண்ட காட்சி தன் எதிரே இ௫ மலைகள் ஒன்று சேர்ந்து குழந்தை யை கையழைக்கும் தாயை போல கரம் நீட்டி அழைப்பது போல் தோற்றம் அழித்தது. ஹே வாவ் … என்று வியப்பில் மூழ்கியுள்ள.. தன் இட பக்கம் திரும்பி பார்த்தாள்.. சுற்றிலும் கோட்டை மதில் போல் மலை சூழ்ந்திருந்தது.
“என்னங்க… எவ்ளோ அழகா இருக்குல….மலைகள்..பச்சை பசேல் என்ற வயல் வரப்புகள்..”… என்று குதூகலமானாள்.. இவர்கள் தொடங்கியிருக்கும் பயணம் கேரளாவில் உள்ள வாகமான் பகுதிக்கு. அவள் அன்னை வீடோ தென் தமிழகத்துக்கும் கேரளாவிற்கும் இடையிலே ஆன குற்றாலத்தில் தான் உள்ளது. நெடுவெங்கிலும் மலையும் வயல் வரப்புகள் தான் நிறைந்திருந்தன.. அதிகாலை ஆதவனின் கதிர் வீச்சுகள் ….இதமான இளம் வெயிலின் ஜ்வாலையில் ஜொலிக்கும் அனைத்தையும் ரசித்து கொண்டே நால் வரும் உரையாடி கொண்டே தொடர்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலை அவர்களை வரவேற்கும் வண்ணம் அவர்கள்முன் சென்று கையழைத்து கொண்டே நகன்றது.. அதிகாலை விழித்த கலைப்பில் மழலைகள் உரங்க தொடங்கினர்.” ஜானு மதிய ௨ணவு அங்கே போய் சாப்டுகலாமா இல்லை போகும் போது சாப்பிட்டு விட்டு செல்லலாமா” என்று விணவினான்… எத்தனை மணி ஆகும் ங்க நாம அங்க போய் சேர என்று கேட்டாள். நாம் மெதுவாக சென்றால் 12 கு செல்லலாம் என்றான்.. ஓ… வாவ்.. பின்ன என்னங்க அங்க போயே சாப்டுகலாம் என்றாள். அப்போ என் மொபைல்ல விகாஷ் னு நம்பர் கால் பன்னு.மதிய ௨ணவு வேணும்னு இப்பவே சொல்லிடனும்..ட்ரிங் ட்ரிங்…..ஹ்ம் விகாஷ்….மணு பேசுறேன்…கிளம்பிட்டேன்..ஆன் த வே தான்.. 12 கு வந்துடுவோம். லஞ்ச் ரெடி பன்னீரிங்களா?… மறுமுனையில் இருந்து விகாஷ் …சரே சார்.. பட் எக்ஸ்ட்ரா சார்ஜ்ன் தான் பரவாயில்லையா என்றான்… ஹாம்… இட்ஸ் ஓகே… அவ்ளோ சீக்கிரம் சாப்பிட முடியாது… அதான் சொன்னேன்… என்றான் மணு..ஓகே சார்..வாகமான் குள்ள என்ட்ரி குடுக்கும்போது கால் பன்னுங்க…என்று சொல்லி தொலைபேசியை துண்டித்தான் விகாஷ்…இவ்ளோ சீக்கிரம் போய்டலாம்ங்கிற எண்ணம் அவளை இன்னும் உற்சாக படுத்தியது. டேப்பில் ஓடும் மனம் மயக்கும் இளையராஜாவின் மெல்லிசை.. இசையில் மூழ்கடிக்கும் சுற்றிலும் பசுமை காட்சிகள்….. தன் காதலனும் அருகிலிருக்க.. ஆம் அவன் காதலனே….தன் மனைவியை காதலியைப் போல் இன்ப அதிர்ச்சிகள் கொடுத்து வியப்பில் மூழ்கடிப்பான்…அவள் தேவையை அவளை விட அவனறிவான்.…இந்த பயணம் கூட அவளுக்கும் குழந்தைகள்கும் கிடைத்த கடைசி நிமிட சர்ப்ரைஸ்…. இதையெல்லாம் நினைவில் ரசித்த வண்ணம் மெல்லிய புன்னகை பூத்த பூவாய் அமர்ந்திருந்தாள்… ” என்ன ஜானு.. ஒரே சிரிப்பா இருக்கு… ” இந்த புன்னகையை தான் இவ்வளவு நேரம் எதிர்பார்த்தவனாய் இப்பொழுது கண்டதும் ஒன்றும் அறியாதவன் போல் நகைத்தான்.. “ஷ்ஊ… பசங்க தூங்கிறாங்க.. அமைதி யா என்னை பாக்காம ரோட பாத்து கார் ஓட்டுங்க ” என்றாள்.. அந்த மெல்லிசை ராகத்தோடு மீதி தூரம் கடந்தது…
நண்பர்களே உங்களுடைய சிறுகதை அல்லது உண்மை கதை அல்லது உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், நீங்கள் சென்ற சுற்றுலா, உங்கள் விவசாய முறை, உங்கள் ஊர் பற்றிய முழு தகவல் போன்ற அணைத்து விதமான தகவல்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால் தகுந்த புகைப்படங்களுடன் 2 – 3 பக்க கட்டுரையை blogbynavin@gmail.com என்கிற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் இந்த வலைத்தளத்தில் பதிவிடுகிறோம். இந்த பக்கத்தின் லிங்கை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உங்கள் சந்தோசத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி நண்பர்களே
மலைகள் கடந்து வானின் உச்சத்தை தொடுவது போல் வந்து நின்றது கார். ஆம்..மணு புக் பன்னதோ உயர்ந்த மலையின் உச்சியில் இருக்கும் ஒரு ரிசார்ட்டில் தான்…அங்கே காத்திருந்தது ஓர் பேரதிர்ச்சி… கடுமையான வெயில் சுட்டெரித்தது… சற்றும் இந்த ஏமாற்றத்தை எதிர்பாராத மணு….என்னடி ஜானு.. வெயில் இப்படி கொழுத்துது… இதுக்கு உங்க ஊர்லயே இருந்தி௫க்கலாம் போலயே… என்று புலம்ப தொடங்கினான்.. எதையும் அறியாத குழந்தைகள் ஐ…… ஜாலி.. வந்தாச்சு… கார் கதவை திறந்தார்கள்.. பின் நிலை அறிந்தவனாய் மணு, ஜானு பசங்கள பார்த்துகோ…நான் போய் ரிசப்ஷன் ல பார்த்துட்டு வரேன்.. என்று கீழிரங்கி நடக்க தொடங்கினான்… பின் வந்து அவர்களை அழைத்துச் சென்றான்.. அங்கே மழை மட்டும் தான் பொய்த்தது..மேகங்களை தழுவும் கட்டடம்.. கீழே எட்டி பார்த்தால் பூமி யே காலடியில் தான் உள்ளது என்று எண்ணம் தோன்றும் அளவுக்கு உயரம்.. சுற்றிலும் பசுமை நிறைந்த தேயிலை தோட்டம்.. இதையெல்லாம் ரசித்த வண்ணம் தங்கள் அறைக்கு சென்றார்கள்.. மதிய உணவும் தயாராகி அறை தேடி வந்தது.. பிரயாணத்தில் களைத்தவர்களாய் சிறிது ஓய்வெடுத்தார்கள்.. உள்ளே தொலைக்காட்சியும் இருந்ததால் பசங்களுக்கும் நிறைவு கிடைத்தது…
மாலை குழந்தைகள் விளையாட தனியே பூங்கா இருந்தது.. கார்த்திக் மற்றும் சஞ்சய் கூட்டை விட்டு வெளியே வந்த பறவை போல குதூகலமாக ஆடினர்.. அச்சிறுவர்களை கண்டிக்கவும் மனமில்லை. பாதுகாப்புக்கு பயமில்லை.. வேறென்ன வேண்டும் இந்த இளஞ்சோடிகளுக்கு… கைகோர்த்து உரையாடி கொண்டே சுற்றி பார்க்க சென்றார்கள்.. அன்றைய பொழுதும் அடைந்தது.. மறுநாள் காலை 6 மணிக்கு சின்ன எதிர்ப்பார்புடன் கதவை திறந்து எட்டி பார்த்தாள் பனி பொழியுமா என்று.. ஏன்டா பார்த்தோம் ங்கிற அளவுக்கு ஆத்திரம் அடைந்தாள்.. கதிரவன் அவள் கதவோரம் வந்து நகைப்பது போல் பிரகாசமாய் ஜொலி ஜொலித்தான்.. அந்த ஆதவனுக்கே உரிமை உள்ளவள் போல் சினங்கொண்டு டமார் என்று கதவடைத்து போர்வைக்குள் நுழைந்தாள்… இன்னைக்கு ட்ரெக்கிங் போகலாம்னு சொன்னார்களே.. ஆனால் இப்பவே இவ்ளோ வெயில் இருக்கு.. இதில எப்படி நடக்க முடியும்… அதும் குழந்தைகள் களைப்பில் எப்படி எந்திரிபாங்க என்று யோசித்த வண்ணம் படுத்திருந்தாள்… அதற்குள் மணு கண் விழித்து பார்த்து என்னடி அதிசயமா இவ்ளோ சீக்கிரம் எழுந்திட்ட.. டிரெக்கிங் ரெடியாய்ட்டியா என்று வெறுப்பேற்ற தொடங்கினான்.. நீங்க வேற கடுப்பேத்தாதிங்க… அடிக்கிற வெயில்ல எங்க நடக்கிறது என்று புலம்பினாள். தூங்கு டி பேசாம.. 8 மணிக்கு மேல் எழுந்து ஸ்விம்மிங் பூல் போலாம். பின் 10 மணிக்கு மேல் சஃபாரி ரைட் போலாம் என்று அவளை சமாதான படுத்தினான்.
அதேபோல் 8 மணி தொடங்கி நீச்சல் குளத்தில் ஒரே ஆட்டம் மணு வும் கார்த்திக் கும்.. சஞ்சய் கோ நீரென்றால் பயம். அவன் ஆறுதல் காக ஜானவியும் அவனுடனிருப்பாள். இது வழக்கம் தான். அவளுக்கு புதுதில்லை.தந்தையும் மகனும் பந்து எறிந்து கோல் போட்டு ஆடினர். பந்து வெளியே வந்தால் சஞ்சய் குதூகலமாக எடுத்து உள்ளே எறிந்தான்.. பின் கார்த்திக் சகோதரன்கு காவல் நிக்க ஜானவி உள்ளே இறங்கினாள்.. மணு இன்னும் உற்சாகமாய் பந்து வீச தொடங்கினான்.. ஜானவியும் ஈடு கொடுத்து ஆடினாள். குழந்தைகள் மிக உற்சாகமாய் கைத்தட்டி ரசித்து கொண்டிருந்தார்கள்.. சிற்றுண்டி நேரம் முடிய போகுது… சாப்பிட வாங்க என்று ஒரு நபர் வந்து கூறினார். இவர்கள் அறை சென்று உடை மாற்றி சஃபாரி கு தயாராக நீர், நொறுக்கு தீனி எல்லாம் எடுத்து கொண்டு சென்றனர். உணவு உண்டபின் ஜீப் தேடி சென்றனர்.. விடுதிக்கு வெளியில் எட்டி பார்த்தால் ஒன்றும் காண முடியவில்லை.. என்னங்க என்னாச்சு ஏன் இவ்ளோ புகையா இருக்கு கேட்டாள். வா… வெளியே வந்து பார் என்றான் எதையோ பார்த்தபடி நின்றவன் போல்… கீழ் இறங்கியதும் தான் உணர்ந்தாள் அது புகையல்ல.. தான் காத்திருந்த பனி என்று… கோப்பையை வென்றவள் போல் குழந்தைகளிடம் கோஷமிட்டாள். அவர்களை இழுத்து கொண்டு பனி சூழ்ந்திருக்கும் இடத்தை நோக்கி ஓடினாள்.. சந்தோஷத்தில் கூச்சலிட்டார்கள்.. மெதுமெதுவாக அவள் உடல் சிலிர்த்தது… வெண் பனி, மென் பனி இந்த பெயர் காரணம் இப்போது உணர்ந்தாள்.. காற்று கூட ஒலி எழுப்பும். ஆனால் இந்த பனி எவ்வளவு மென்மையா இருக்கு… அதன் தீண்டலில் மட்டுமே உணர முடிகிறது….அவள் சுற்றி ஒன்றுமில்லை. மலை யும் இல்லை மேலே ஆகாயமும் இல்லை கீழே பூமி யும் இல்லை… எங்கே இருக்கிறோம் என்ற நிலை மறந்து இது தான் சொர்கமா என்று எண்ணம் வந்து மதி மயங்க செய்தது… சட சட வென்ற சத்தம் அவர்களை திரும்பி பார்க்க செய்தது… பின் மழை ஆர்ப்பரித்து கொண்டது அவ்விடத்தை. வேறு வழியின்றி மனமும் இன்றி அறைக்கே திரும்ப செல்ல வேண்டியதாயிற்று.. மாலை வரை மழை தொடர்ந்ததால் சஃபாரி நாளைக்குறியதாயிற்று…மதியம் ரிசார்ட்கு உள்ளேயே இருக்கும் விதவிதமான படகு சவாரி ,மோட்டார் போட் ,பரிசல்,..இப்படி எல்லாத்திலயஎல்லாத்திலயும் ஒரு ரவுண்ட்ஸ் போயாச்சு. ரிசார்ட்ல பார்வைக்காக ஜீவராசிகளின் பன்னை வைத்திருந்தார்கள்.அதில் முயல்,கோழி,காடை,ஆட்டு மந்தை,மாட்டு தொழவம் இவைகளெல்லாம் அரங்கேறியது குழந்தைகளுக்கு இன்னும் கொண்டாட்டமாயிற்று..கிராமத்தில் வசிக்கும் உணர்வு அங்கிருக்கும் வரையில் கிடைத்தது…இன்றைய பொழுது மன நிறைவோடு கழிந்தது..
மூன்றாம் நாள் கிளம்பும் நாள்.. ஆனால் மதியம் மேல் தான் கிளம்புவதால் சஃபாரிகு போதிய நேரம் கிடைத்தது.காலையில் நிதானமாக எழுந்து ரெடியானார்கள்… தனக்காக தயாராயிருந்த ஜீப் பில் சென்றார்கள்.. பசங்களுக்கு ஒரே குஷி.. அந்த மலைச்சரிவில் வனப்பகுதிக்குள் ஜீப் ரோலர் கோஸ்ட் மாதிரி சென்றது..ஜீப் எங்கிலும் ஒரே கூச்சல் ஒலிதான்.திடீர்னு ப்ரேக் அழுத்தினார் ட்ரைவர்.. எல்லோரும் ஏன்னு நிலை உணரும் முன் உஷ் என்ற மெதுவாக சைகை காண்பித்தார்.. எல்லோரும் சுற்றி சுற்றி பார்த்தனர்..திகீர் என்றது.. கம்பீரமான யானைகள் 2 வனத்தில் இருந்து சாலையோரமாக நடந்து வந்தது.சாலை வந்ததும் யானை வனப்பகுதியை பார்த்து தலையசைத்தது..ஜீப்பில் அமர்ந்தவர்களுக்கு ஆர்வம் கூடுதலாயிற்று.. அவர்கள் கண்ட காட்சி கணவா நினைவா என்று சந்தேகத்தில் ஆழ்த்தியது..குட்டி குட்டி யானைகள் முதல் கோட்டை மதில் போல் தோன்றும் பெரிய யானை வரை வரிசையில் அடுக்கி வைத்த பொம்மைகள் போல் 12 யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக வன மலையிலிருந்து கீழிறங்கி வந்தனர்.. ஜீப் பை கண்டதால் அந்த யானை கூட்டம் சாலை ஓரமாக நின்றன… பயம் கலந்த உணர்ச்சி எல்லோரையும் உலுக்கியது.. 5 நிமிடங்கள் ஆகியும் அவைகள் அசையவே இல்லை..சாலையை கடக்க ஜீப் யானைகளுக்காகவும் யானைகள் ஜீப் காகவும் காத்திருந்தது..விலங்குகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுந்தது… பாதுகாப்பாக முன்னும் பின்னும் பெரிய யானைகள் நடுவில் குழந்தைகள்… வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நிகழ்வு அங்கே அரங்கேறியது..தன் குடும்ப பாதுகாப்பில் ரொம்பவே கவனமாக இருந்த யானைகள் வென்றது. வேறு வழியின்றி ஜீப் நகர வேண்டியதாயிற்று.. விழி நகர்த்த முடியாமல் குழந்தைகள் திரும்பி பார்த்த வண்ணமே வந்தனர்.. ஹே….அப்பா.. அங்க பாருங்க பா… யானை லாம் எவ்ளோ அழகா லைனா ரோட க்ராஸ் பன்னுதுனு… என்று கோர்வையாக கூச்சலிட்டனர் குழந்தைகள் இருவரும்.. அந்த ஜீப் தொடர்ந்து சேர்ந்த இடம் மலைகளின் நடுவே ஓடும் ஆற்றில்.. அந்த சூழலை சற்றும் எதிர்பாராத ஜானவி தன் குழந்தைகளின் கைகளை அகற்றி விட்டு ஓடி ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள ஒரு பாறையில் ஏறி அமர்ந்து ஆற்றில் ஓடும் மீன்களிடம் விளையாட தொடங்கினாள்.. தந்தையும் மகன்களும் செல்ஃபி எடுப்பதில் பிஸியாக இருந்தார்கள்.. பின் சமயம் ஆக ஆக மணு அனைவரையும் ரிசார்ட்கு விரட்ட தொடங்கினான். இனி அவன் கவலை ரிசார்ட் வெக்கேட் பன்னி மாலை பொழுதிற்குள் மலை இறங்குவது தான். இனி அவன் எப்படி இருந்தா என்னங்க….அவன் திட்டமிட்ட வானளாவிய இன்ப நினைவலைகளை தன் காதலிக்கும் இளவரர்சர்களுக்கும் கொடுத்துவிட்டான்.. இது அவங்களோட முதல் சுற்றுலா இல்லங்க… ஒவ்வொரு தடவையும் இப்படி தான் எங்கேயாச்சும் கூட்டிட்டு போய் விடுவான் அந்த அழகிய காதலன். ஏன் சொல்லப்போனா சனி ஞாயிறு லீவ்க்கே எங்கயாச்சும் ஊர் பயணம் செய்ய கிளம்பிடுவாங்க.. நீங்களும் ஒரு மாறுதல்கு போய்ட்டு வாங்க. இதப்படிக்கும் போது அனுபவிச்சத அப்ப உணர்வீங்க..
இப்போது என்னோடு உலா வந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.. இந்த தருணத்தில் ஏதேனும் ஓர் இடத்தில் நீங்கள் அங்கிருந்ததாக உணர்ந்தீர்களானால் நான் உங்கள் மனதை வென்றுவிட்டேன்.. அதே மன நிறைவோடு அடுத்த உலாவில் சந்திப்போம்…
*****ஜான்சி ராணி*****
இந்த கதையை எழுதி நமக்கு அனுப்பியவர் Bakya Amirtharaj அவர்கள்…. நன்றி Bakya…
நண்பர்களே உங்களுடைய சிறுகதை அல்லது உண்மை கதை அல்லது உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், நீங்கள் சென்ற சுற்றுலா, உங்கள் விவசாய முறை, உங்கள் ஊர் பற்றிய முழு தகவல் போன்ற அணைத்து விதமான தகவல்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால் தகுந்த புகைப்படங்களுடன் 2 – 3 பக்க கட்டுரையை blogbynavin@gmail.com என்கிற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் இந்த வலைத்தளத்தில் பதிவிடுகிறோம். இந்த பக்கத்தின் லிங்கை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உங்கள் சந்தோசத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி நண்பர்களே
2 comments
மனமார்ந்த நன்றிகள் நவின் அவர்களே.. தமிழோடு வளர வாய்ப்பளித்ததிற்கு நன்றி.. இயற்கையையும் தமிழையும் வளர்க்க உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி. தொடர்ந்து எழுத உங்களுக்கு TamilStorage இன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்